ஷாக் கொடுக்கும் பெட்ரோல் விலை

ஒவ்வொரு நாளும் பெட்ரோல், டீசல் விலை அதிரடியான மாற்றங்களை கண்டு வரும் நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம் பற்றி அறிந்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

15 ஆண்டுகளாக அமலில் இருந்த முறையை மாற்றி, நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்கள் கையில் ஒப்படைக்கப்பட்டது

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு இதன் விலையில் மாற்றம் செய்யப்படுகின்றன.

கொரோனா காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சந்தித்து வரும் நிலையிலும், பெட்ரோல் – டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முடிகிறது.

இந்நிலையில் சென்னையில் பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.83.63ஆக விற்கப்படுகிறது. டீசல் விலை 13 காசுகள் உயர்ந்து லிட்டருக்கு ரூ.78.86 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

Exit mobile version