சரிவில் தங்கம் விலை!

இன்றைய தங்கம்- வெள்ளி விலை நிலவரங்களை பார்ப்போம்.

தொடர்ந்து மூன்றாவது நாளாக தங்கம் விலை சரிவை சந்தித்துள்ளது வாடிக்கையாளர்களிடையே மகிழ்ச்சியை ஏறபடுத்தியுள்ளது.

பண்டிகை நாட்களில் தங்கம் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதன்படி ஒரு கிராம் ஆபரண தங்கத்தின் விலை ரூ. 4,677 ஆக உள்ளது. நேற்றைய விலையை விட இது ரூ. 3 குறைவு ஆகும்.

அதேபோல, 8 கிராம் ஆபரணத்தங்கம் 24 ரூபாய் குறைந்து 37,416க்கு விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை இதற்கு மாறாக அதிகரித்துள்ளது. நேற்று ரூ. 70.40 விற்பனையான வெள்ளி இன்று ரூ. 70.70க்கும் ஒரு கிலோ வெள்ளி ரூ. 70,700க்கும் விற்பனை ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version