ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவரும் இந்தியாவின் பெரும் பணக்காரராக இருக்கும் முகேஷ் அம்பானி உலக கோடிஸ்வரர்களின் வரிசையில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

உலக கோடீஸ்வரர் பட்டியலில் நான்காம் இடம் பிடித்தார் முகேஷ் அம்பானி!!!
“ப்ளூம்பெர்க்” என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலக பணக்காரர்கள் வரிசையில் நான்காம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார் இந்தியாவின் பெரும் நிறுவனமான ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி.
சென்ற ஆண்டு இறுதியில் முதல் பத்து இடங்களுக்குள் வந்து சாதனை படைத்த அம்பானி இப்போது நான்காம் இடத்தை பிடித்துள்ளார், சுமார் 80 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு உள்ள அம்பானியின் ரிலையன்ஸ் குழுமம் கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 22 பில்லியன் டாலர் லாபம் பெற்றுள்ளது.
கடந்த ஆறு மாதமாக கொரோனா நோயின் காரணமாக பல நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்த நிலையில் இவர் நிறுவனம் அதிக லாபம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்டியலில் தொடர்ந்து முதல் இடத்தில் facebook நிறுவனர் மார்க் ஸுகர்பேர்க்கும், இரண்டாம் இடத்தில் மைக்ரோ சாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் , அமேசான் நிறுவனர் ஜெப் பிசோவ் மூன்றாம் இடத்தில் உள்ளனர் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.