இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டுள்ள நடிகர் தான் பார்த்திபன். பல்வேறு கோணத்தில் தமிழ் சினிமாவை இயக்கிய ஒரு பெருமை இவருக்கு உண்டு. வித்தியாசமான படங்களை இயக்கி மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடித்தவர். இவர் இயக்கிய ஒத்த செருப்பு திரைப்படம் பல விருதுகளை பெற்று உலகளவில் திரையுலகின் கவனத்தை அது பெரிதும் ஈர்த்தது. இவர் கடைசியாக இயக்கிய இரவின் நிழல் திரைப்படம், நான் லீனியர் திரைக்கதை முறையில் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றது. இதைத்தொடர்ந்து பார்த்திபன் தற்போது புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இயக்குனர் பார்த்திபன் தனது சமூக வலைதளத்தில், “மாலையும் இரவும் சந்திக்கும் நேரம். புதிய பாதை எத்தனை மொழிகளில் முறையான அனுமதியின்றி எடுக்கப் பட்டிருந்தாலும் மகிழ்ச்சி” என பதிவிட்டிருந்தார். இந்த பதிவிற்கு ரசிகர் ஒருவர் “புதிய பாதை” படத்தின் இரண்டாம் பாகம் எடுத்தால் நன்றாக இருக்கும்” என்று கமெண்ட் செய்திருந்தார். இந்த பதிவிற்கு பதிலளித்துள்ள பார்த்திபன், “தற்போது தயாராகிவரும் படம் (தலைப்பு-any guess?)முடிந்ததும் PP2 தயாராகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.கடந்த 1989-ஆம் ஆண்டில் வெளியான “புதிய பாதை” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் தான் பார்த்திபன். இந்த படத்தில் சீதா, மனோரமா, வி.கே.ராமசாமி உள்ளிட்டோர் அபாரமாக நடித்தனர். இப்படம் பல மொழிகளில் ரீமேக்கும் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பாதை 2ம் பாகத்திற்கு “பாதை போட்ட பார்த்திபன்”
-
By mukesh

Related Content
பிரதமர் நரேந்திர மோடிக்கு அமைதிக்கான நோபல் பரிசு
By
daniel
December 13, 2025
தூய்மைப்பணியாளர்களுக்கு ஆதரவாக திலகபாமா!
By
daniel
November 20, 2025
காஸாவிற்கு ஆதரவாகத் தீர்மானம் - மு.க.ஸ்டாலின்
By
daniel
October 8, 2025
12ந் தேதி மக்கள் சந்திப்பு யாத்திரையைத் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!
By
daniel
October 6, 2025
தமிழ்நாடு நாட்டிற்கே வழிகாட்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
By
daniel
October 4, 2025
ஸ்டாலின் தன்னைப் பார்த்தே கேள்விகள் கேட்க வேண்டும் - இபிஎஸ்
By
daniel
October 3, 2025