லியோ வில் இணைந்தார் புதிய திரை பிரபலம்

லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம்தான் ‘லியோ’. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் அவர்கள் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை மெட்டுக்கள் கோர்க்கிறார். ‘லியோ’ படத்தின் படப்பிடிப்பானது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இயக்குனரும் நடிகருமான அனுராக் காஷ்யப் லியோ படத்தில் இணைந்துள்ளதாக சமீபத்திய தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு இயக்குனர் அனுராக் காஷ்யப் நயன்தாரா அதர்வா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version