வெண்ணிலா கபடிகுழு, பாண்டியநாடு, நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை என பல்வேறு படங்களை எல்லாம் இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வருபவர் தான் இயக்குனர் சுசீந்திரன். இவர் தற்போது விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்து வரும் ‘வள்ளி மயில்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் பிரியா அப்துல்லா, சத்யராஜ், பாரதிராஜா, தம்பி ராமையா, ஜி.பி.முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.இந்தப்படத்தை நல்லுசாமி பிக்சர்ஸ் தயாரிப்பில் தயாரிப்பாளர் தாய் சரவணன் என்பவர் தயாரிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இப்படத்திற்கு விஜய் சக்ரவர்த்தி ஒளிப்பதிவு செய்கிறார். வள்ளி திருமணத்தை பின்புலமாக கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்பட்டு வைரலானது.எனவே இந்நிலையில் இப்படம் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, ‘வள்ளி மயில்’ திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் இப்படத்தின் இசை மற்றும் டிரைலர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து படப்பிடிப்பு பணிகள் தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைதளத்தில் வைரலாகி கொண்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
விறு விறு படப்பிடிப்பில் “வள்ளி மயில்”
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
வெள்ளி வென்ற நீரஜ்!
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024