என்னதான் ஆச்சு மீரா மிதுனுக்கு?.. நீளும் பட்டியல்..அதுக்கு சூர்யா தான் பொறுப்பு..

பரபரப்புக்கு பஞ்சமில்லாத நடிகையும், மாடலுமான மீரா மிதுன், தற்போது தனக்கு கொலை மீரட்டல் வருவதாக குற்றம்சாட்டியுள்ளார்.

ஆரம்ப காலத்தில் மாடல் ஆக இருந்த போது பெரிய அளவில் பேசப்படாத மீரா மிதுன், தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழக மக்களிடையே பேசு பொருளானார். அதைத்தொடர்ந்து, அவர் பேட்டை, தானா சேர்ந்த கூட்டம் மற்றும் நம்ம வீட்டுப் பிள்ளை போன்ற படங்களில் நடித்து இருந்தாலும், பணமோசடி உள்ளிட்ட அவர் மீதான அடுக்கடுக்கான புகார்கள் காரணமாக அவர் நடித்து முடித்த காட்சிகள் கூட படத்தில் இருந்து வெட்டி எடுக்கப்பட்டன. ஆனாலும், இணையத்தில் தொடர்ந்து பல சர்ச்சைகுரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்

இந்நிலையில், சமீப காலமாக தமிழ் திரை உலகிலும் பாலிவுட்டை போன்று நெப்போட்டிசம் எனும் வாரிசுகளின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதாக குற்றம்சாட்டி வருகிறார்.

இதற்கு அவர் குறிப்பிட்ட பெயர்கள் தான் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர், சூர்யா-கார்த்திக் குடும்பம் மற்றும் கமல் குடும்பம் தமிழ் திரையுலகில் ஆதிக்கம் செலுத்துவதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், அவர்கள் பலரது வாய்ப்புகளை தடுத்து நிறுத்துவதாகவும் ஆதாரங்கள் இன்றி அள்ளி விட்டுள்ளார்.

தொடர்ந்து, 10 ஆயிரம் ரூபாயை இரு விவசாயிகளுக்கு கொடுத்து விட்டு நடிகர் கார்த்திக் சீன் போடுவதாகவும், இருவரை படிக்க வைத்துவிட்டு சூர்யா பில்டப் விடுவதாகவும் வாய்விட்டு, அவர்களது ரசிகர்களிடம் இருந்து வாங்கிக் கட்டிக் கொண்டுள்ளார்.

குறிப்பாக, சூர்யாவுக்கு நடிபிப்பிற்கு ஸ்பெல்லிங் கூட தெரியாது எனவும், என் நடிப்பின் மீது ஏற்பட்ட பொறாமை காரணமாகவே தானா சேர்ந்த கூட்டம் படத்தில் இருந்து நிக்கிவிட்டதாகவும், தான் வந்தால் கீர்த்தி சுரேஷிற்கு சங்கடமாக இருக்கும் என்பதால் என்னை அப்படத்தின் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கவில்லை எனவும் அளந்து விட, “ஏம்மா இதெல்லாம் உனக்கே ஓவரா தெரியலையா” என்பதோடு, இதென்னாடா நமக்கு வந்த சோதனைன்னு சூர்யா ரசிகர்கள் நக்கலாய் பொங்கியுள்ளனர் .

குறிப்பாக, சூர்யாவும், அவரது குடும்பமும் அவர்களின் படங்கள் ரிலீசாகும் போது தான் வாய் திறப்பார்கள். பொன்மகள் வந்தாள் படத்தின் ரிலீஸின்போது ஜோதிகா தஞ்சாவூர் கோவிலை பற்றி தவறான முறையில் பேசினார். தற்போது இவர்களின் படங்கள் அடுத்தடுத்த ரிலீஸாக உள்ள நிலையில் சூர்யாவும் கார்த்தியும் EIA-விற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என பரட்டையை போன்று அரசியல் திரியை பற்ற வைத்துள்ளார்.

சன் டிவியில் பிகில் திரைப்படம் ஒளிபரப்பப்பட உள்ளதை முன்னிட்டு, விஜர் ரசிகர்கள் போஸ்டர் அடித்து ஒட்டியள்ளனர். அதனை, மீரா மிதுனின் ரசிகர்கள் அவருக்கு பாரவார்ட் பண்ண, தற்போதைய சூழலில் இதுதான் உங்க சமூக அக்கரையா சார் என விஜய்க்கு டிவிட்டரில் டேக் செய்து தனது சமூக அக்கறையை வெளிப்படுத்தி உள்ளார்

பல ஆண்டுகளாக திரை உலகில் உள்ள திரிஷா, தனது பாணியை காப்பி அடிப்பதாகவும், மாபியா கும்பலை தன் வசம் வைத்து கொண்டு பேட்டை படத்தில் ரஜினியுடன் நடிக்க வேண்டியிருந்த தனது வாய்ப்பு பறிக்கபட்டதாகவும் குற்றம்சாட்டி உள்ளார் மீரா மிதுன். அதோடு, போர போக்கில் ஐவர்யா ராஜேஷும் தனது வாய்ப்புகள் பறிபோக காரணம் என வெடியை கொளுத்தி போட்டுள்ளார்.

திரை உலகை எல்லாம் கடந்து, தான் தமிழக மக்களுக்காக பேசுபவர் என்பதை நிரூபிக்கும் வகையில் பிரதமர் மோடி மற்றும் தமிழக முதலமைச்சரையும் வம்பிழுத்து உள்ளார் மீரா மிதுன். கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் சூழலில் எப்படி உரடங்கில் தளர்வுகளை வழங்கலாம், தமிழ்நாடு சுடுகாடாக மாறப்போகிறது என டிவிட்டரில் இருவரையும் டேக் செய்து கேள்வி எழுப்பியுள்ளார்.

இப்படி, தமிழகத்தின் முக்கிய முகங்களான அரசியல், சினிமா என இருதுறைகளையும் தனது குற்றச்சாட்டுகளால் அடித்து நொறுக்கியுள்ள மீரா மிதுன். தற்போது தனக்கு கொலை மிரட்டல் விடுவதாகவும், எனக்கு ஏதேனும் ஆனால் அதற்கு நடிகர் சூர்யா தான் பொறுப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version