பாலிவுட் மற்றும் டோலிவுட்டில் ரீமேக் ஆகும் “ஓ மை கடவுளே”

இந்திப் படங்கள் தமிழில் ரீமேக் ஆகும் காலம் மாறி இப்போதெல்லாம் தமிழ் படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக்காகி வருகிறது. வித்தியாசமான கதைகளம்,மாறுப்பட்ட திரைக்கதை, புதிய இயக்குனர்கள் வருகை போன்ற காரணங்களால் இது சாத்தியமாகி இருப்பதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு அஷ்வத் மாரிமுத்து இயக்கி வெளியான சூப்பர் ஹிட் படம் ‘ஓ மை கடவுளே’. அசோக் செல்வன் ஹீரோவாகும், ரித்திகா சிங் ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். விஜய் சேதுபதி சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். மேலும் வாணி போஜன், இயக்குனர் கெளதம் மேனன், எம்.எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், சாரா ஆகியோர் நடித்திருந்தனர்.இந்தப் படம் தற்போது இந்தியில் ரீமேக்காக உள்ளது.

குழந்தைப் பருவ நண்பர்களை மையமாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டருந்தது. நண்பர்களாக இருந்த இருவர் திருமணம் செய்து கொண்டால் எவ்வாறு இருக்கும் என்பதுதான் இந்த படத்தின் கதைக்களம். ரொமான்ஸ், காமெடி என இரண்டிலும் கலக்கிய இந்தப் படம், விமர்சன ரீதியாகவும் கமர்ஷியலாகவும் வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகி வருகிறது. தெலுங்கில் இதன் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படம் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.

இந்திக்கு செல்லும் இந்தப் படத்தை தமிழில் இயக்கிய அஸ்வத் மாரிமுத்துவே இயக்குகிறார். “102 நாட் அவுட்” இயக்குனர் உமேஷ் சுக்லா இதனை எழுதுகிறார். சுக்லா, எண்டமால் ஷைன் இந்தியா மற்றும் மும்பை டாக்கீஸ் ஆகியவை இந்தப் படத்தின் உரிமைகளைப் பெற்றுள்ளன

இதன் மூலம் இந்தியில் அறிமுகமாகவுள்ள இயக்குநர் அஸ்வத், தற்போது ஓ மை கடவுளே படத்தின் தெலுங்கு பதிப்பையும் இயக்குகிறார். திரைப்படத் துறையில் தனக்கு முதல் படியாக இருந்ததால், இந்த படம் தனது இதயத்திற்கு நெருக்கமானது அவர் குறிப்பிட்டார்.

Exit mobile version