தமிழ் சினிமாவில்’உள்ளத்தை அள்ளித்தா’, அருணாச்சலம், அன்பே சிவம், வின்னர், கலகலப்பு உள்ளிட்ட பல்வேறு வெற்றி படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சுந்தர்.சி. இவர், கடந்த 2006-ம் ஆண்டு வெளியான ‘தலைநகரம்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சுராஜ் இயக்கியிருந்த இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன்பின் தலைநகரம் படத்தின் இரண்டாம் பாகம் உருவாவதாக சில நாட்களுக்கு முன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்கியது. இப்படத்திலும் சுந்தர்.சி கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தை அஜித்தின் ‘முகவரி’, சிம்புவின் ‘தொட்டி ஜெயா’, பரத்தின் ‘நேபாளி’, ஷாமின் ‘6 கேண்டில்ஸ்’, சுந்தர்.சி நடித்த ‘இருட்டு’ ஆகிய படங்களை இயக்கிய வி.இசட்.துரை என்பவர் இயக்குகிறார். அறிவிப்பு வெளியான நாளில் இருந்தே விறுவிறுப்பாக நடைபெற்று வந்த ‘தலைநகரம்-2’ படத்தின் படப்பிடிப்பானது அண்மையில் நிறைவுற்றது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டு இருக்கிறது. ‘தலைநகரம் 2 படத்தின் டிரைலரானது தற்போது இணையத்தில் வைரலாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ரிலீசுக்கு தயாராக இருக்கும் “தலைநகரம் 2” வைரலாகும் புதிய ட்ரெய்லர்
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
தளபதி விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த ஜல்லிக்கட்டு ஜலீல்!
By
daniel
September 8, 2024
அன்றே சொன்ன திலகபாமா; திண்டுக்கல்லில் திடீரென வேலையை ஆரம்பித்த திமுக!
By
daniel
August 30, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024