100Cr கிளப்பில் இணைந்த சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!! தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா அருள் மோகன் நடிப்பில் வெளியான திரைப்படம் டாக்டர். இத்திரைப்படம் தற்போது 100 கோடி வசூலை ஈட்டி வசூல் சாதனை படைத்துள்ளது.

கடந்த அக்டோபர் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, இன்றுவரை சக்கைபோடு போட்டுக்கொண்டிருக்கும் டாக்டர் படம் கொரோனா இரண்டாம் அலை தாக்கத்தில் இருந்து தமிழ் சினிமாவை மீண்டு எழ செய்துள்ள திரைப்படங்களில் முக்கியமானது. அரங்குகள் நிறைந்த காட்சியாக வயிறு வலிக்க சிரிக்க வைக்கும் திரைப்படமான இது ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

படம் வெளியாகி அனைவர் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது படத்தின் வசூல் விவரம் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

கேரளாவிலும் இத்திரைப்படம் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் டாக்டர் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் சாதனை நிகழ்த்தியுள்ளது.

இதனை தயாரிப்பு நிறுவனமான கேஜெஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தொடர்ந்து இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அந்நிறுவனம் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டுள்ளது.

Exit mobile version