ரஜினிகாந்த் ஏற்கனவே நெல்சன் திலிப்குமாரின் இயக்கத்தில் ஜெயிலர் திரைபடத்தை முடித்துவிட்டார் அதன் பின் மகள் ஐஸ்வர்யா இயக்கும் லால் சலாம் படத்தில் அவர் நடித்து வருகிறார். ஜெயிலர் படத்துக்கான தொழில் நுட்ப பணிகள் விறுவிறுப்பாக தற்போது நடந்து வருகின்றன எனவே இந்த படம் ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகிவிடும். லால் சலாம் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை புதுச்சேரியின் சுற்று வட்டார பகுதிகளில் படமாக்கி வருகிறார்கள். படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்ற புகைப்படங்கள் சமீபத்தில் வெளியாகி வைரலாகி இருக்கிறது. இன்னும் சில தினங்களில் ரஜினி சம்பந்தமான காட்சிகள் அனைத்தையும் படமாக்கி முடித்து விடுவார்கள் போல் தெரிகிறது. இந்நிலையில் ரஜினிகாந்த் அடுத்து தனது 170-வது படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். இந்த படத்தை சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படத்தை எடுத்து பிரபலமான டி.ஜே.ஞானவேல் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் தொடங்க படக்குழு திட்டமிட்டிருப்பதாக ஒரு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. போலி என்கவுன்ட்டர் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும், இதில் ரஜினி போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தலைவர் 170க்கு தயாராகும் ரஜினிகாந்த்
-
By mukesh
Related Content
கருணாநிதி வேலையில்லாமல் இருந்தாரா?
By
daniel
November 27, 2024
விஜய் கட்சியின் புதிய கொடி
By
daniel
August 22, 2024
வேலூர் மக்களை ஏமாற்றினாரா மு.க.ஸ்டாலின்?
By
daniel
August 13, 2024
வைகோ கண்டனம்
By
daniel
August 9, 2024
GOAT படத்திற்கு ஆடியோ லான்ச் இல்லை?
By
daniel
August 8, 2024
மாமதுரை விழா!
By
daniel
August 8, 2024