ஆஸ்கர் விருதை வென்றார் வில் ஸ்மித்- ட்யூன் படத்துக்கு 6 விருதுகள்..!!

2022 oscar winners
oscar award

94-வது ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் ’கிங் ரிச்சர்ட்’ படத்தில் நடித்தற்காக வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான விருது வழக்கப்பட்டது.

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் 94-வது ஆண்டு ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்றது. கடுமையான கொரோனா கட்டுப்பாடுகளுடன் நடைபெற்ற இவ்விழாவில் பல்வேறு ஹாலிவுட் பிரபலங்கள் பங்கேற்றனர்.

இந்த விழாவில் சிறந்த படத்துக்கான விருதை சியான் ஹூதர் இயக்கிய கோடா சிறந்த படத்துக்கான பிரிவில் விருது வென்றது. டென்னீஸ் வீராங்கனைகள் செரீனா மற்றும் வீனஸின் தந்தை ரிச்சர்டு வில்லியம்ஸ் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான படம் கிங் ரிச்சர்ட். இப்படத்தில் கிங் ரிச்சர்ட் கதாபாத்திரத்தில் நடித்த வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார்.

அதேபோல ’தி ஐஸ் ஆஃப் டாமி ஃபே’ படத்தில் நடித்த ஜெசிகா செஸ்டேயின் சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் விருதை வென்றார். தி பவர் ஆஃப் தி டாக் படத்தை இயக்கிய பெண் ஜேன் கேம்பியன் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்றார்.

2022 ஆஸ்கர் விருது வழங்கும் விழாவில் சிறந்த அனிமேஷன் படமாக ‘என்சாண்டோ’ தேர்வு செய்யப்பட்டது. சிறந்த அயல்நாட்டு திரைப்படமாக ஜப்பான் நாட்டின் டிரைவ் மை கார் படத்துக்கு விருது வழங்கப்பட்டது. மொத்தன் 23 கொண்ட ஆஸ்கர் விருதுகளுக்கான பிரிவில், சிறந்த காட்சியமைப்பு, சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த ஒலிக்கலவை, சிறந்த ஒரிஜினல் ஸ்கோர், சிறந்த எடிட்டிங், சிறந்த புரோக்‌ஷன் டிசைன் என 6 பிரிவுகளில் ட்யூன் படம் விருது வென்றது.

Exit mobile version