சிறந்த நடிகர் விருது யாருக்கு..? நாளை நடைபெறும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா..!!

2022 oscar nominations
2022 oscar

இந்தாண்டுக்கான ஆஸ்கர் திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நாளை லாஸ் ஏஞ்சலஸ் நகரில் நடைபெறவுள்ளதை அடுத்து, மிகப்பெரிய எதிர்பார்ப்பு உலகளவில் உருவாகியுள்ளது.

உலகளவில் திரைத்துறைக்கு வழங்கப்படும் விருதுகளில் ஆஸ்கர் முதன்மையானதாக உள்ளது. இந்தாண்டுக்கான 94-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா நாளை லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் நடைபெறவுள்ளது.

இந்திய நேரப்படி நாளை அதிகாலை 6 மணிக்கு விழா துவங்குகிறது. யாருக்கு விருது கிடைக்கும், எந்த படம் சிறந்த படத்துக்கான விருதை தட்டிச் செல்லும் என உலகளவில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

டென்னீஸ் வீராங்கனைகள் செரினா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸின் தந்தை ரிச்சர்ட் வில்லியம்ஸின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி வெலியான படம் ’கிங் ரிச்சர்டு’. இந்த படத்தில் நடித்துள்ள வில் ஸ்மித் சிறந்த நடிகருக்கான் விருதை பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதேபோல பெல்ஃபாஸ்ட், கோடா, டிரைவ் மை கார், வெஸ்ட் சைடு ஸ்டோரி , ட்யூன் போன்ற படங்களும் பல்வேறு பிரிவுகளில் போட்டியிடுகின்றன. கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் இவ்விழா நடைபெற உள்ளது.

Exit mobile version