நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் தான் எனது மருத்துவக்கனவு நிறைவேறியது : மருத்துவக்கல்லூரி மாணவி பெருமிதம்

நடிகர் சிவகார்த்திகேயன் உதவியால் நீட் தேர்வில் வெற்றி பெற்று மருத்துவ கல்லூரியில் படிப்பதாக மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி:

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் உள்ள பூக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் சஹானா. இவர் தற்போது திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவ கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். முதலாமாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றுக்கொண்டு பேசிய சஹானா கூறியதாவது:

Read more – புது மாப்பிள்ளைக்கு தலைப்பொங்கல் விருந்து : 125 வகையான உணவு பரிமாறி மாமியார் அசத்தல்

அரசு பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு வரை படித்த எனக்கு மருத்துவம் பயில வேண்டும் என்ற கனவு இருந்தது. பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலையில்,நீட்தேர்வு காரணமாக மருத்துவ சீட்டு கிடைக்குமா என்ற பயத்தில் இருந்த எனக்கு பள்ளியின் தலைமையாசிரியர் உதவியால், நடிகர் சிவகார்த்திகேயன் ஒரு வருட நீட் பயிற்சிக்கு தேவையான கட்டணத்தை செலுத்தி உதவியுள்ளார்.

இதன் மூலம் நீட் தேர்வில் வெற்றிப் பெற்று தனது மருத்துவ கனவை நனவாக்கியிருக்கிறார் என்று தெரிவித்துள்ளார். மேலும், சஹானாவின் தாய் சித்ரா தெரிவிக்கையில், மின்சாரம் கூட இல்லாத வீடு, எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். மருத்துவ படிப்பு என்பது ஏழை வீடுகளுக்கு தேவையா என்று இருந்த எங்களுக்கு என்னுடைய மகள் தற்போது மருத்துவ படிப்பில் சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. எங்கள் பரம்பரையில் இவர்தான் முதல் டாக்டர்.” என்று மகிழ்ச்சியாக கூறினார்.

Exit mobile version