இயக்குனர் ஓம் ராவத் இயங்கி இருக்கும் ராமாயணத்தில் நடைபெற்ற கதைக்ளத்தை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் தான் ‘ஆதிபுருஷ்’ . இதில் ராமராக பிரபாஸ், ராவணனாக சயீப் அலிகான், சீதையாக கீர்த்தி சனோன் நடித்துள்ளனர். பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோ பைல்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளனர். இந்த படம் ஆரம்பத்தில் இருந்தே விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது. ஆதிபுருஷ் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் எல்லாம் நேற்றுமுன் தினம் வெளியானது. இது தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் பல்வேறு இடங்களில் அதிகாலை காட்சிகளும் கூட திரையிடப்பட்டது. தமிழகத்தில் எதிர்பார்த்த வரவேற்பு இல்லாவிட்டாலும் ஆந்திர மக்கள் படத்தைக் கொண்டாடி வருகின்றனர். நேற்றுமுன் தினம் ஒரே நாளில் உலகம் முழுவதும் ‘ஆதிபுருஷ்’ படம் புதிய வசூல் சாதனைகளை படைத்து வருகிறது. அதாவது இதுவரை இந்தியாவில் அதிக வசூல் செய்த படங்களில் ‘ஆதிபுருஷ்’ நான்காவது இடத்தில் உள்ளது. இந்தப் படம் 2 நாட்களில் 240 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக படக்குழுவானது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான முதல் நாளில் 140 கோடி ரூபாயும், சனிக்கிழமையான நேற்று 100 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆதிபுருஷ் படத்தின் வசூல் தெரியுமா?
-
By mukesh

Related Content
7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?
By
daniel
September 12, 2026
Wipro-வில் 20,000 பேரின் வேலையை AI எடுத்துக்கொண்டதா? உண்மையில் நிறுவனம் சொன்னது என்ன?
By
daniel
September 11, 2026
நாளை டெல்லியில் BRICS உச்சி மாநாடு: ஜி ஜின்பிங் முதல் புதின் வரை உலகத் தலைவர்கள் வருகை; இந்தியாவுக்கு ஏன் முக்கியம்?
By
daniel
September 11, 2026
புகழ்பெற்ற பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா காலமானார்; தமிழுலகின் தனித்துவமான குரல் ஓய்ந்தது!
By
daniel
September 11, 2026
செப்.15-ல் வேட்புமனு தாக்கல் செய்யும் திமுக வேட்பாளர்கள்; சூடுபிடிக்கும் மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்!
By
daniel
September 11, 2026