செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘ஆயிரத்தில் ஒருவன்2’ படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கடந்த 2015ம் வருடம் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, ஆண்ட்ரியா, ரீமா சென், பார்த்திபன் என பலரும் நடித்திருந்த படம் ‘ஆயிரத்தில் ஒருவன்’. படம் விமர்சன ரீதியாக பார்வையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
படம் வெளியான சமயத்திலேயே செல்வராகவன் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் எனவும் சோழ இளவரசனின் பயணம் தொடரும் எனவும் அறிவித்திருந்தார்.
READ MORE- சிம்புவுடன் கைக்கோர்க்கும் பிரியா பவானி ஷங்கர்!
அந்த வகையில் சிறிது நாட்களுக்கு முன்பு செல்வராகவன், யுவன்ஷங்கர் ராஜா, தனுஷ் என இவர்கள் மூவரும் இணைந்த கூட்டணி ரசிகர்களிடையே ‘புதுப்பேட்டை2’ படத்திற்கான எதிர்ப்பார்ப்பை கிளப்பியிருக்க நேற்று அதிரடியாக ‘ஆயிரத்தில் ஒருவன்2’ படத்தின் அறிவிப்பை செல்வராகவன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும் படம் 2024ல் வெளியாகும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
இந்த செய்திக்கு ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக வலைதள பக்கங்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்த நிலையில், ‘ஆயிரத்தில் ஒருவன்2’க்கு யுவன் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.