சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்றார் நடிப்பு அசுரன் தனுஷ்…

சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று கொண்டார் அசுரன் தனுஷ்.

டெல்லி, டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு துணைத்தலைவர் வேங்கையா நாயுடு, மத்திய தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். இதில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது அசுரன் திரைப்படத்தில் நடித்த நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது. வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆண்டு வெளியான ’அசுரன்’ வசூல் சாதனை செய்ததோடு, தனுஷின் சிறந்த நடிப்பிற்காக பாராட்டுகளையும் குவித்தது.

தனுஷ், மஞ்சுவாரியர், கென் கருணாஸ், டீஜே அருணாச்சலம், பசுபதி ஆகியோர் நடித்து இருந்தார்கள். எத்தனை பேர் நடித்தாலும் தனுஷுன் எதிர்பாராத குணமும், அசுரத்தனமான சண்டை காட்சிகளும் இறுதியில் படத்தை மேலும் மெருகூட்டும் வகையில் தனுசின் வசனம் என தனுஷ் காதபாத்திரமே படத்தை மீண்டும் மீண்டும் நினைவூட்ட தொடங்கியது. இந்நிலையில், சிறந்த நடிகருக்கான தேசிய விருதை நடிகர் தனுஷ் குடியரசு துணைத்தலைவரிடம் இருந்து பெற்று கொண்டார். ஏற்கனவே அசுரன் படத்திற்கு சிறந்த மொழி படத்திற்கான தமிழ் பிரிவில் அசுரன் படத்திற்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version