பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் எங்களை வழிநடத்துகிறது: மிஷ்கின்

திரைப்பட பத்திரிகையாளர்களின் விமர்சனங்கள்தான் எங்களை வழிநடத்தி வருகிறது என்று நடிகரும், இயக்குநருமான மிஷ்கின் கூறினார்.

தமிழ் திரைப்பட பத்திரிக்கையாளர்கள் சங்கத்தின் புதிய அலுவலகத்தின் திறப்பு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் மிஷ்கின் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

விழாவில் மிஷ்கின் பேசும்போது, “சித்திரம் பேசுதடி படம் தொடங்கி இப்போது வரை என்னை வழிநடத்திச் சென்று கொண்டிருப்பது பத்திரிக்கையாளர்களான நீங்கள் மட்டுமே. எத்தனையோ ஏற்ற இறக்கங்கள் இருந்தும் என்னை கை பிடித்து கூட்டிச் சென்றது நீங்கள்தான். இதை நான் மறக்க மாட்டேன்.

இன்று எனக்கு படம் சார்ந்த சில வேலைகள் இருப்பினும் இது எனது கடமையாக நினைத்து இந்த அலுவலக திறப்பு விழாவில் கலந்து கொண்டேன். ஒவ்வொரு படம் வரும்போது உங்களின் விமர்சனங்களே எங்களை மேற்கொண்டு வழிநடத்திச் செல்கிறது. விமர்சனங்களை எப்போதும் இயக்குனர்கள் ஏற்றுக்கொள்ளும் பக்குவம் வேண்டும். நானும் அப்படித்தான் படம் நன்றாக இருந்தால் நல்ல விமர்சனங்களையும், சிறப்பாக இல்லை என்றாலும் அதற்குரிய விமர்சனத்தையும் நிச்சயம் ஏற்றுக் கொள்பவன். அதற்கான பக்குவத்தைப் பெற்றுள்ளேன்” என்றார்

Exit mobile version