ஆர்யாவின் ‘சார்பட்டா’ ஃப்ர்ஸ்ட் லுக் அவுட்!

‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கில் ஆர்யா பாக்ஸிங் கோர்ட்டில் நிற்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.   

இயக்குநர் பா. இரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்திருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

80களில் வட சென்னையில் நடக்கும் பாக்ஸிங் வீரரின் கதையை அடிப்படையாக வைத்து உருவாகும் படம் என இந்த படம் குறித்தான தகவல் வெளிவந்திருந்தது. கொரோனா லாக்டவுனால் நிறுத்தி வைக்கப்பட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ளது.

இந்த படத்திற்காகவும் பாக்ஸர் கதாப்பாத்திரத்தில் நடிப்பதற்காகவும் ஆர்யா பாக்ஸிங், உடற்பயிற்சி என கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டதையும் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் அவ்வப்போது பகிர்ந்து வந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. இது குறித்தான அறிவிப்பை நேற்றே படக்குழு வெளியிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ‘சார்பட்டா பரம்பரை’ என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக்கில் ஆர்யா பாக்ஸிங் கோர்ட்டில் நிற்பது போன்று வெளியிடப்பட்டுள்ளது.   

Exit mobile version