தனுஷின் பாலிவுட் படமான ‘அத்ரங்கிரே’ படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது.
’கர்ணன்’, ‘டி43’, செல்வராகவன் படம் என பிஸியாக இருக்கும் தனுஷ் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ படத்திற்கு பிறகு ‘அத்ரங்கிரே’ படத்தில் கமிட் ஆனார். இதில் அக்ஷய் குமார், சாரா அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
’ராஞ்சனா’, ‘ஷமிதாப்’ படங்களுக்கு பிறகு தனுஷின் மூன்றாவது பாலிவுட் படம் இது. அந்த வகையில் கொரோனாவால் தடைப்பட்ட படப்பிடிப்பு கடந்த மாதம் துவங்கியது. தற்போது படப்பிடிப்பு முடிந்துள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார்.
READ MORE- ‘ஈஸ்வரன்’ படத்தின் மியூசிக்கல் ஆல்பம் எப்போது ரிலீஸ்?
சிறிது நாட்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் வாழ்த்துகளோடு தனுஷ், சாரா மற்றும் படக்குழுவினர் படப்பிடிப்பு தளத்தில் இருந்து புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். இந்த நிலையில் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக கூறி கேக் வெட்டி புகைப்படங்களை சமூகவலைதள பக்கங்களில் பகிர்ந்துள்ளனர்.