மீண்டும் இணையும் அனிருத் – தனுஷ் கூட்டணி..

நடிகர் தனுஷ் மீண்டும் இசையமைப்பாளர் அனிருத்துடன் கூட்டணி அமைக்கவுள்ளார்.

தனுஷ் நடித்த ‘3’ படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மைத்துன் ரவி ராகவேந்தரின் மகன்தான் இந்த அனிருத்.
இதைத் தொடர்ந்து ‘வேலையில்லா பட்டதாரி’, ‘மாரி’, ‘தங்கமகன்’ ஆகிய தனுஷ் நடித்த படங்களுக்கும், ‘எதிர்நீச்சல்’, ‘நானும் ரவுடிதான்’ ஆகிய தனுஷ் தயாரித்த படங்களுக்கும் அனிருத் இசையமைத்து ஹிட்டாக்கினார்
.
ஆனால் அதன்பின்னர் வந்த தனுஷ் படங்களில் அனிருத் பணிபுரியவில்லை. இந்நிலையில் இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாம்.
குட்டி, உத்தம புத்திரன், யாரடி நீ மோகினி போன்ற படங்களை இயக்கிய மித்ரன் ஜவஹர், அடுத்ததாக தனுஷை வைத்து புதிய படத்தை இயக்குகிறார். அந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Exit mobile version