ஹாலிவுட்டில் மீண்டும் கால்பதிக்கும் தனுஷ்!

’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபக்கிர்’ ஹாலிவுட் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் மீண்டும் ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.

’தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆஃப் ஃபக்கிர்’ ஹாலிவுட் படத்தை தொடர்ந்து தற்போது தனுஷ் மீண்டும் ஹாலிவுட்டில் கால் பதித்திருக்கிறார்.

READ MORE- சிரஞ்சீவியை இயக்கும் மோகன்ராஜா!

அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா, சிவில் வார், விண்டர் சோல்ஜர் உள்ளிட்ட ஹாலிவுட் ஹிட் படங்களை கொடுத்த அந்தோணி மற்றும் ஜோ ரூஸோ இயக்குநர்களின் அடுத்த கதையில் நடிக்க கமிட் ஆகியுள்ளார் தனுஷ்.

நாவல் ஒன்றை அடிப்படையாக கொண்டு ’தி க்ரே மேன்’ என்ற படத்தை இயக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். இதில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகியுள்ளார். நெட்ஃபிலிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கும் இந்த படத்தில் க்றிஸ் ஈவான்ஸ், ரயன் காஸ்லிங் ஆகியோர் முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ரசிகர்கள் பலரும் தனுஷ்க்கு வாழ்த்துகள் தெரிவித்து இந்த செய்தியை சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version