அடடே… இயக்குநர் பாக்யராஜா இது?… கோட் சூட்டில் பட்டையைக் கிளப்பும் போட்டோஸ்!

இயக்குநர் பாக்யராஜ் கோட் சூட்டில் செம்ம ஸ்டைலிஷாக வெள்ளை தாடி, அவருடைய அடையாளமான கண்ணாடி அணிந்து நடத்தியுள்ள லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வைரலாகி வருகிறது.

K Bhagyaraj

திரையுலகில் நடிகைகளுக்குகே டப் கொடுக்கும் விதமாக இயக்குநர்கள், நடிகர்கள், காமெடி நடிகர்கள் ஆகியோர் விதவிதமான கெட்டப்பில் அசத்தலான போட்டோ ஷூட்களை நடத்தி வருகின்றனர். தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இயக்குநர்களில் ஒருவராக வலம் வந்த பாக்யராஜ் தற்போது நடத்தியுள்ள போட்டோ ஷூட் தாறுமாறு வைரலாகி வருகிறது.

நடிகர், கதையாசிரியர், இயக்குநர் என பன்முக திறமைகளுக்கு சொந்தக்காரரான பாக்யராஜ், குடும்ப சென்டிமெண்ட் மற்றும் காமெடி கலந்து எடுக்கும் படங்களுக்கு இன்று வரையிலும் தனி ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது இயக்கத்தில் பெரிதாக கவனம் செலுத்தாவிட்டாலும் பாக்யராஜ் நடிப்பில் பின்னிபெடலெடுத்து வருகிறார். கொரோனா தொற்று, லாக்டவுன் போன்ற பிரச்சனைகளில் இருந்து எல்லாம் மீண்ட பிறகு, செம்ம புத்துணர்ச்சியோடு அசத்தல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி முடித்துள்ளார்.

பிரவுன் கலர் கோட் சூட், தல அஜித் போல் சால்ட் அண்ட் பெப்பர் லுக், கண்ணாடி சகிதமாக செம்ம ஸ்டைலிஷ் லுக்கில் பாக்யராஜ் கொடுத்துள்ள போஸ்கள் சோசியல் மீடியாவில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

Exit mobile version