’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக். விஜய்சேதுபதி ரோலில் யார்?

’விக்ரம் வேதா’ இந்தி ரீமேக்கில் விஜய் சேதுபதி-மாதவன் ரோலில் யார் நடிக்கிறார்கள் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

‘விக்ரம் வேதா’ படம் கடந்த 2017ம் வருடம் புஷ்கர் காயத்ரி இயக்குநர்கள் இயக்கத்தில் வெளியானது. விஜய்சேதுபதி, மாதவன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.

இந்த நிலையில் இந்த படம் இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிட்டு ஆமீர்கான் மற்றும் சையத் அலிகான் இருவரையும் நடிக்க வைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியானது. இதற்கிடையைல் கொரோனாவால் படப்பிடிப்பு தொடங்குவதில் தாமதம் ஏற்பட தற்போது படத்தில் இருந்து ஆமீர்கான் வெளியேறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

திரைக்கதை திருப்தி அளிக்காத சூழலில் அவர் வெளியேறி விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் தற்போது அமீர்கானுக்கு பதிலாக ஹிருதிக் ரோஷன் நடிக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

READ MORE- சிம்புவுக்கு குட்டி ரசிகர் கொடுத்த முத்தம்!- வைரலாகும் வீடியோ!

அமீர்கானுக்கு முன்பே ஹிருத்திக்கை படக்குழு அணுகியிருந்த சூழலில் தற்போது மீண்டும் அவரே கதைக்குள் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை விரைவில் எதிர்ப்பார்க்கலாம்.

Exit mobile version