இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பை அளித்த நடிகர் ரஜினிகாந்திற்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்திய சினிமாத்துறையில் மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது தாதா சாகேப் பால்கே விருதானது இந்த ஆண்டு நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்க இருப்பதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
அதன்படி, 51-வது தாதா சாகேப் பால்கே விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Read more – ஆட்சி அமைக்க அவர்கள் கோடிகளை கொட்டுகிறார்கள், நாங்கள் நல்ல கொள்கைகளை கொட்டுகிறோம் : சீமான்
இந்தநிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு இந்திய பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ் போன்ற பல அரசியல் தலைவர்கள் மற்றும் கமல் ஹாசன் போன்ற திரை பிரபலங்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.