ரஜினிகாந்த் இன்று டிஸ்ஜார்ஜ் செய்யப்படுகிறாரா?

ஹைதராபாத்தில் உள்ள அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்வது குறித்து இன்று தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இந்த மாதம் டிசம்பர் 15 அன்று கொரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது. இதில் நயன்தாரா, ரஜினி, குஷ்பு, மீனா என அனைவரும் தனி விமானங்கள் மூலமாக தக்க பாதுகாப்புடன் ஹைதராபாத் சென்றடைந்தனர்.

ஆனால், படப்பிடிப்பு துவங்கிய சில நாட்களிலேயே அங்கு படப்பிடிப்பில் 4 பேருக்கும் கொரோனா பாதிப்பு என தெரிய வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், ‘அண்ணாத்த’ படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில், ரஜினிகாந்த்திற்கு கொரோனா பாதிப்பு இல்லை எனவும் தகவல் தெரிவித்தார்கள்.

இந்த நிலையில், ஹைதராபாத்தில் இருந்து ரஜினி சென்னை திரும்ப இருந்த நிலையில் அவருக்கு யர் இரத்த அழுத்தம் காரணமாக, அங்கிருந்த அப்பலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ரஜினிகாந்த் விரைவில் குணமடைய வேண்டும் என பல பிரபலங்களும் தங்களுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் பதிவிட்டு இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது ரஜினியின் உடல்நிலையில் இன்று முன்னேற்றம் தெரிந்தால் இன்று மாலை அவரை டிஸ்சார்ஜ் செய்வது குறித்து முடிவெடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version