‘போடோ போடி’ பார்ட்2. சிம்புவை இயக்கும் விக்னேஷ் சிவன்?

‘போடோ போடி’ படத்தின் பார்ட்2 உருவாக இருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கடந்த 2012வது வருடம் சிம்பு, வரலட்சுமி நடிப்பில் உருவான படம் ‘போடா போடி’. இதில் வரலட்சுமி நாயகியாக அறிமுகமாகி இருந்தார்.

படத்தினை விக்னேஷ் சிவன் இயக்கியிருந்தார். படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில் படம் வெளியாகி 8 ஆண்டுகளுக்கு பிறகு இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகும் என படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் சிம்புவே ஹீரோவாக நடிக்கும் நிலையில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் ஹீரோயின் ரித்திகா பால் நடிக்க இருக்கிறார். முதல் பாகத்தை போலவே நடிப்பை மையமகா கொண்டு பார்ட்2 நகரும் என தெரிகிறது.

READ MORE- சிம்பு கதையில் விஜய்?

படத்தை விக்னேஷ் சிவனே மீண்டும் இயக்குவாரா என ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்த நிலையில் தயாரிப்பு தரப்பு வேறு இயக்குனர் உள்ளே வருவார் என தெளிவுப்படுத்தியுள்ளது. அடுத்த வருடம் மே மாதம் லண்டனில் ஷூட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version