தன் நண்பன் பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சிம்பு சர்ப்ரைஸ் கொடுத்திருக்கிறார்.
தன் நண்பன் சாத்தப்பனுடைய பிறந்தநாளுக்காக நள்ளிரவில் சர்ப்ரைஸ் விசிட் கொடுத்திருக்கிறார் சிம்பு.
சென்னை, கோபாலபுரத்தில் இருக்க கூடிய தயாரிப்பாளும் கவிஞர் கண்ணதாசனுடைய சகோதரருமான ஸ்ரீனிவாசனுடைய பேரன்தான் சாத்தப்பன். இவரும் சிம்புவும் சிறு வயதில் இருந்தே நெருங்கிய நண்பர்கள்.
அப்படி இருக்கும் போது நேற்று இரவு 11 மணிக்கு மேல் தன் நண்பனுக்கு சிம்பு பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக்கோடு சர்ப்ரைஸ் விசிட் கொடுத்து இருக்கிறார்.
இதில் சாத்தப்பனும் அவரது குடும்பமும் நெகிழ்ந்து போயிருக்கிறார்கள். சாத்தப்பனின் அம்மா ஜெயந்தி, ‘அடுத்த முறை வரும்போது கல்யாணம் ஆகி மனைவியோட வரனும்’ என அன்பு கட்டளை போட, ‘கல்யாணமா, அட போங்க’ என வெட்கப்பட்டு சிரித்திருக்கிறார் சிம்பு.
READ MORE- சிவகார்த்திகேயன்க்கு இங்கிலீஷ் டீச்சரான ரகுல்!
நண்பர்களோடும் குடும்பத்தோடும் ஒரு மணி நேரம் செலவிட்ட பின்பு அங்கிருந்து கிளம்பியிருக்கிறாராம் சிம்பு.