‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் சிங்கிள் ட்ராக் அவுட்!

சிம்பு நடிக்கும் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் சிங்கிளாக தமிழன் ட்ராக் தற்போது வெளியாகி இருக்கிறது.

நடிகர் சிம்பு கரியரில் கம்பேக் கொடுக்கும் படமாக இயக்குநர் சுசீந்திரனின் ‘ஈஸ்வரன்’ அமைந்திருக்கிறது. தமன் இசையமைத்திருக்கிறார்.

கொரோனா லாக்டவுனுக்கு பிறகு எடுக்கப்பட்ட இந்த படம் கிராமத்து கதையை மையமாக கொண்டிருக்கிறது. ஒரு மாதத்தில் எடுக்கப்பட்ட இந்த படம் பொங்கல் வெளியீடு என்பதை ஃப்ர்ஸ்ட் லுக் வெளியான போதே அறிவித்து விட்டார்கள். படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே இருக்கும் நிலையில் படத்தின் சிங்கிள் ட்ராக் தற்போது வெளியாகி இருக்கிறது.

‘தமிழன் பாட்டு’ என தொடங்கும் இந்த பாடல் கிராமத்து திருவிழாவுக்கான கொண்டாட்டத்தோடு அமைந்திருக்கிறது. ‘சிலம்பாட்டம்’, ‘ஒஸ்தி’ படங்களுக்கு பிறகு தமன் சிம்புவுடைய இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

READ ALSO- ‘வலிமை’ அப்டேட் குறித்து மனம் திறந்த அஜித் தரப்பு!

‘சிலம்பாட்டம்’ படத்தில் வரும் ‘தமிழன்னா நான் ஒரு தமிழண்டா’ பாடல் ஸ்டைலிலேயே இந்த ‘தமிழன் பாட்டும்’ அமைந்திருக்கிறது. யுகபாரதி வரிகளுக்கு அனந்து பாடியிருக்கிறார். இந்த பாடல் சிம்புவின் ஓப்பனிங் பாடலாக இருக்க வாய்ப்புகள் அதிகம்.

அதேபோல பாடலின் மைனஸ் என்றால் வாய்ஸ்ஸை விட இசை அதிகமாகி விட்டது போல் உள்ளது. எப்படி இருந்தாலும், இவ்வளவு நாட்கள் காத்திருந்த சிம்பு ரசிகர்களுக்கு இந்த பாடல் மாஸ் ட்ரீட்.

Exit mobile version