தளபதி விஜய் வழியில் சிவகார்த்திகேயன்? #Don #SK19

சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

‘டாக்டர்’, ‘அயலான்’ படங்களுக்கு பிறகு சிவகார்த்திகேயனின் அடுத்த படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

அட்லியின் உதவி இயக்குநரான சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் அனிருத் இசையமைப்பில் படத்தின் டைட்டில் ‘டான்’ என அறிவிக்கப்பட்டுள்ளது. படத்திற்கான டைட்டில் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதில் காலேஜ் பஸ்ஸில் இருந்து மாணவர்கள் இறங்க, உள்ளே ப்ரின்சிப்பில் அறைக்குள் தயாரிப்பாளர் லைகா புரொடக்‌ஷன் சுபாஷ்கரன் இருக்கிறார்.

அதற்கு பிறகு கல்லூரி வகுப்பறைக்குள் மாஸ்டர் இயக்குநர் சிபி இருக்க வெளியே ஃபுட்பால் விளையாட்டு மைதானத்தில் சிவகார்த்திகேயன் மாணவர்களுக்கு நடுவில் நிற்கிறார்.

READ MORE- ‘மாஸ்டர்’ ஓடிடி ரிலீஸ் இன்னும் இரண்டு நாட்களில்…என்ன காரணம்?

ஃபுட்ஃபால் கோச்சாக வர அதிக வாய்ப்புகள் இருக்கிறது. மேலும் பட டைட்டில் டீசரும் கலர்ஃபுல்லாக, எனர்ஜிட்டிக்காக இருக்கிறது. படமும் அப்படியே இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம். படத்துக்கு வாழ்த்துகள் வரும் அதே சமயத்தில் எஸ்.கே. தளபதி விஜய்யை ஃபாலோ செய்கிறார்.

அவரது ‘நண்பன்’, ‘பிகில்’, ‘மாஸ்டர்’ படங்களை போலவே காலேஜ் சப்ஜெக்ட், ஃபுட்பால் கோச் என அனைத்தும் இருக்கிறது என்ற பேச்சும் கிளம்பியிருக்கிறது. படம் வெளிவந்த பிறகுதான் இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெரிய வரும்.

படத்தின் ஹீரோயின் மற்ற நடிகர்கள் குறித்தான அறிவிப்பு இதெல்லாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.  

Exit mobile version