நிழல் உலகின் வில்லன், நிஜ உலகின் ஹீரோ! மலைக் கிராம மாணவர்களுக்கு மொபைல் டவர் அமைத்து கொடுத்த நடிகர் சோனு சூட்

ஆன்லைன் வகுப்புகளுக்கு சிக்னல் கிடைக்காமல் தவித்த மலைக்கிராம மாணவர்களுக்கு நடிகர் சோனு சூட் மொபைல் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

பொது முடக்கம் ஆரம்பித்த நாட்களில் இருந்தே நடிகர் சோனு சூட் அவர்கள் சாமானிய மக்களுக்கு உதவி வருகிறார். குறிப்பாக புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர் செல்ல பஸ் வசதி செய்து கொடுத்தது, ரஷ்யாவில் சிக்கித்தவித்த தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் தாயகம் திரும்ப விமானம் ஏற்பாடு செய்து தந்தது, விவசாயிக்கு டிராக்டர் வாங்கி கொடுத்தது, ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன் வாங்கி கொடுத்தது என இவர் செய்த உதவிகள் ஏராளம்.

இந்நிலையில் ஹரியானா மாநிலம் ஹார்னி என்னும் மலைக் கிராமத்தில் சிறுமி ஒருவர் சிக்னல் கிடைக்காமல் மரத்தின் மீது ஏறி ஆன்லைன் வகுப்புகளை கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. இதனை அறிந்த நடிகர் சோனு சூட் அவர்கள் அந்த மலைக் கிராமத்தை சேர்ந்த மாணவர்கள் எந்தவித சிரமமும் இன்றி ஆன்லைன் கல்வி கற்க ஏற்ற வகையில் அந்த கிராமத்திற்கு மொபைல் டவர் அமைத்துக் கொடுத்துள்ளார்.

Exit mobile version