பணத்தை கொடுத்தா போதும் ஆள விடுங்க சாமி…நடிகர் சூரி கதறல்…

2.70 கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் தனக்கு பணம் திரும்பக் கிடைத்தால் போதும் என நடிகர் சூரி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்த வீரதீர சூரன் என்ற திரைப்படத்தில் பிரபல நகைச்சுவை நடிகர் சூரி நடித்துள்ளார்.இதற்காக வழங்க வேண்டிய ரூ.40 லட்சம் ஊதியத்துக்கு பதில் சிறுசேரியில் ஒரு நிலத்தை தருவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் மற்றும் விஷ்ணு விஷால் தந்தையும், ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யுமான ரமேஷ் குடவாலா கூறியுள்ளனர்.

அந்த நிலத்துக்காக இவர்கள் இருவரும் தன்னிடம் இருந்து ரூ.2.70 கோடியை கூடுதலாக
பெற்று மோசடி செய்து விட்டதாக காவல்துறையில் நடிகர் சூரி புகார் அளித்திருந்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கை தற்போது மத்திய குற்றப்பிரிவு
காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், காவல்துறையினர் தங்களை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சென்னை சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் டி.ஜி.பி’யும் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தையுமான ரமேஷ் குடவாலா முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஆகியோர் தொடர்ந்த முன் ஜாமின் வழக்குகளில் இருந்து தான் விலகுவதாக தெரிவித்து வழக்குகளை வேறு நீதிபதிக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்தார். வழக்குகளில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை நீதிபதி குறிப்பிடவில்லை.இந்நிலையில், இந்த இரண்டு முன் ஜாமின் வழக்குகள் இன்று நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தன்னுடைய முன் ஜாமின் மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக ரமேஷ் குடவாலா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனை ஏற்ற நீதிபதி, ரமேஷ் குடவாலாவின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் முன் ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது, தனக்கு வர வேண்டிய பணம் கிடைத்தால் போதும் என சூரி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மனுவுக்கு நவம்பர் 26ம் தேதிக்குள் பதிலளிக்க மத்திய குற்றப்பிரிவுக்கு உத்தரவிட்டார்.

Exit mobile version