“தளபதி விஜய் பெரியப்பா என் காது குத்துக்கு வந்துருங்க”, என மதுரையில் விஜய் ரசிகர்கள் சார்பில் வித்தியாசமான போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது.
சமீப காலமாக விஜய் ரசிகர்கள் வித்தியாசமான போஸ்டர்களை ஓட்டுவதில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். விஜயை எம்.ஜி.ஆர் ஆகவும், வருங்கால முதலமைச்சர் ஆகவும், அவரை அரசியலுக்கு அழைப்பது போன்றும் தொடர்ந்து அவரது ரசிகர்களால் போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக மதுரையை சேர்ந்த விஜய் ரசிகர்கள் ஒட்டும் போஸ்டர்கள் , அரசியல் வட்டாரத்தில் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், மதுரையில் விஜய் ரசிகர் யாரோ ஒருவரின் குழந்தைக்கு காது குத்து நிகழ்ச்சி 16-ஆம் தேதி நடந்திருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்கு, அந்தக் குழந்தையே விஜயை அழைப்பது போல் ‘தளபதி விஜய் பெரியப்பா வர்ற புதன்கிழமை எனக்கு காதுகுத்து.. மறக்காம வந்திருங்க..’ என்று போஸ்டர் ஒட்டி, விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாநகர் வடக்கு மாவட்ட மாணவரணி தளபதி தலைமை மக்கள் இயக்கம் சார்பில் இந்த போஸ்டர் ஒட்டபட்டுள்ளது
வித்தியாசமாக போஸ்டர் அடித்து வழிப்போக்கர்களைக் கவரவதற்காக விஜய் ரசிகர்கள் இந்த நூதன முறையை பின்பற்றி உள்ளனர்.
எது எப்படியோ? காது குத்து நிகழ்ச்சி என்ற பெயரில் விஜய் கையில் குழந்தை இருப்பது போன்ற படத்தைப் போட்டு, சின்னதாக ‘பப்ளிசிட்டி’ தேடிக்கொண்டதில், தளபதி மக்கள் இயக்க மாணவரணியினர் சாமர்த்தியசாலிகள் தான்.