வேட்டைக்காரன் பட இயக்குனர் பாபு சிவன் உடல்நலக்குறைவால் காலமானார்

விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தை இயக்கிய இயக்குனர் பாபு சிவன் உடல்நலக்குறைவால் காலமானார்.

விஜய் நடிப்பில் கடந்த 2009 ம் ஆண்டு வெளியான படம் வேட்டைக்காரன்.இந்தப்படத்தை பாபு சிவன் இயக்கி இருந்தார். மேலும் விஜய் நடித்த குருவி திரைப்படத்திற்கும் பாபு சிவன் வசனம் எழுதி இருந்தார்.

நேற்று தீடீரென உடல் நலக்குறைவால் பாதிப்புக்குள்ளான பாபு சிவன், சென்னையில் உள்ள பிரபல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது .கல்லீரல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு காரணமாக தொடர் சிகிக்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் . அவரது மரணம் திரையுலகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. திரையுலகை சேர்ந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version