சென்னை திரும்பிய நடிகர் விஜய் மகன்… மகிழ்ச்சியில் குடும்பம்!

நடிகர் விஜய் மகன் சஞ்சய் கொரோனா லாக்டவுன் காரணமாக கனடா நாட்டில் இருந்து திரும்ப முடியாமல் தவித்து வந்தார். அங்கும் கரோனா பாதிப்பு அதிகரித்து வந்த நிலையில், ஒரு வழியாக இப்போது அவர் சென்னை திரும்பியுள்ளார்.

கொரோனா லாக்டவுன் கடந்த மார்ச் மாதம் இந்தியாவில் தொடங்கியது. அந்த சமயத்தில் தான் பல நாடுகளுக்கும் பாதிப்பு பரவியது. இதனையடுத்து சர்வதேச விமானங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. இதனால் பலரும் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவித்தனர். அந்த வகையில் கனடாவில் கலைத்துறை பல்கலைக்கழகம் ஒன்றில் படித்தி வரும் விஜய் மகன் சஞ்சய் சென்னை திரும்ப முடியாமல் அங்கேயே சிக்கிக் கொண்டார்.

நாளுக்கு நாள் கரோனா பாதிப்பு அதிகரித்ததன் எதிரொலியாக சர்வதேச விமானங்கள் இயக்கப்படாமல் இருந்தன. ஆனால் மாணவர்கள் சொந்த நாடு திரும்ப மட்டும் ஒரு சில விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒருவழியாக இப்போது அப்படிதான் சஞ்சய் சென்னை திரும்பியுள்ளார். இதனால் விஜய் குடும்பத்தினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Exit mobile version