விக்ரமின் ‘கோப்ரா’ ஷூட் மீண்டும் தொடங்கியது!

கொரோனா லாக்டவுணுக்கு பிறகு தற்போது மீண்டும் விக்ரமின் ‘கோப்ரா’ பட ஷூட் தொடங்கியுள்ளது.

‘இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் ‘கோப்ரா’.

இதில் விக்ரம் பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறார் என்பது படத்தின் முதல் லுக்கில் தெரியப்படுத்தி இருந்தார்கள். படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். படத்திலிருந்து ‘தும்பி துள்ளல்’ சிங்கிள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

READ ALSO- தங்கை மகனுடன் சிம்புவின் வைரல் வீடியோ!

இந்த நிலையில், இடையில் கொரோனா சூழல் வர படப்பிடிப்பு பாதியில் நின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்டுப்பாடுகளோடு அரசு அனுமதி கொடுத்திருந்தும் ‘கோப்ரா’ படப்பிடிப்பு சில காரணங்களால் தொடங்காமல் இருந்தது.

தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கியுள்ளது. இதனை படக்குழு தங்களது சோஷியல் மீடியா பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

Exit mobile version