நடிகர் விஷ்ணு விஷால் மீது எழுந்துள்ள சர்ச்சைக்கு அவர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஷ்ணு விஷால் அவரது நண்பர்களுடன் தினமும் பார்ட்டி கொண்டாட்டம் என இருப்பதால் தங்கள் நிம்மதி கெடுவதாக அவருடைய ப்ளாட்வாசிகள் போலீசில் கொடுத்துள்ள புகாருக்கு விஷ்ணு விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, ‘வேலை காரணமாக வெளியே போய் வருவதால் இந்த கொரோனா சூழலில் பாதுகாப்பு கருதி என் குடும்பத்தை விட்டு தனியே நான் ப்ளாட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் என்னுடைய பட ஒளிப்பதிவாளரின் பிறந்தநாளை கொண்டாடினோம்.
READ MORE-சூர்யா படத்திற்கு இசையமைக்கும் இமான்! #Suriya40
இதில் ஆல்கஹால் உபயோகித்தது உண்மை. ஆனால், நான் உடற்பயிற்சியில் இருப்பதால் நான் சம்பவ தினத்தன்று மது அருந்தவில்லை. ஆனால், என்னுடைய உடற்பயிற்சி மற்றும் இதுபோன்ற சம்பவங்களின் போது பிறரை தொந்தரவு படுத்தாமல்தான் இருந்தேன்.
இது குறித்தும் அமைதியாகதான் போலீசிடம் விளக்கம் கொடுத்தேன். ஆனால், என்னை கூத்தாடி, குடிகாரன் என தேவையில்லாத வார்த்தைகளால் புகார் கொடுத்தவர் பேசியதால் என்னுடைய பொறுமையை இழக்க வேண்டியதாயிற்று.
அவருக்கு என் அப்பா வயதுதான் அதன் பிறகு நான் வீட்டை காலி செய்ய ஒப்பு கொண்டேன். அவரது மகனுடன் சமரசம் பேசி விட்டோம்’ என நீண்டதொரு விளக்கம் கொடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.