‘KGF2’ டீசர் எப்போது?

படப்பிடிப்பு தொடங்கி க்ளைமேக்ஸ் ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் டீசர் யஷ் பிறந்த நாளன்று வெளியாவதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

கன்னடத்தில் நடிகர் யாஷ் நடிப்பில் 2018ல் வெளியாகி ஹிட் ஆன படம் ‘கேஜிஎஃப்- சாப்டர்1’. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், படத்தின் அடுத்த பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்களிடையே எதிர்ப்பார்ப்பு இருந்தது.

இந்த நிலையில், இந்த வருடம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனா, கொரோனா சூழல் காரணமாக அது நடக்குமா என்பது கேள்விக்குறியாகவுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு இதில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தின் பிறந்தநாளுக்காக போஸ்டர் ஒன்றை வெளியிட்டது படக்குழு.

READ ALSO- ’RRR’ ஷூட்டிங்கில் அலியாபட்!

அக்டோபர் மாதத்திற்குள் படப்பிடிப்பு முடிக்க படக்குழு திட்டமிட்டு 24 நாட்கள் படப்பிடிப்பையும் முடித்துவிட்டது. இந்த நிலையில்தான் கொரோனா சூழல் வந்தது. தற்போது தகுந்த பாதுகாப்பு நடவடிக்கையோடு படப்பிடிப்பு தொடங்கி க்ளைமேக்ஸ் ஹைதராபாத்தில் நடந்து வருகிறது.

இந்த படத்தை இயக்குநர் பிரசாந்த் நீல் தனது சோஷியல் மீடியா பக்கத்தில் பகிர படத்தின் டீசர் யஷ் பிறந்த நாளான ஜனவரி8ல் வெளியாவதை ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

Exit mobile version