நடிகர் சிம்பு இயக்குனர் சுசீந்திரன் இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக தனது உடல் எடையில் பெருமளவு குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் சிம்பு சமீபத்தில் வெளியாகிய அன்பானவன் அடங்காதவன் அசாராதவன், வந்தா ராஜாவா தான் வருவன் உள்ளிட்ட திரைப்படங்களில் சற்று அதிக உடல் எடையுடன் காணப்பட்டார். இந்நிலையில் வெண்ணிலா கபடி குழு, நான் மஹான் அல்ல, பாண்டிய நாடு, ஜீவா, பாயும் புலி, ஆதலால் காதல் செய்வீர் திரைப்படங்களை இயக்கிய சுசீந்திரன் இயக்கும் பெயரிடப்படாத திரைப்படத்திற்காக தனது உடல் எடையை பெருமளவு குறைத்துள்ளாராம். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசை அமைக்க உள்ளார். இவர் ஏற்கனவே ஒஸ்தி, வாலு போன்ற சிம்பு படங்களுக்கு இசையமைத்துள்ளார். இந்த திரைப்படங்களின் பாடல்கள் ஹிட் ஆனது போல் இந்த திரைப்படத்தின் பாடல்களும் ஹிட் ஆகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. ஜெயம் ரவியின் பூமி திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் நிதி அகர்வால் இந்த திரைப்படத்தில் சிம்புவுடன் இணைகிறார்.