என்னது! நடிகை ஐஸ்வர்யா நடிக்கும் படப்பிடிப்பில ஒருத்தருக்கு கொரோனாவா?

ஷூட்டிங்கில் கலந்து கொண்டவருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதால் படப்பிடிப்புக்கு தடைவிதிக்கப்பட்டது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கை தளர்த்தி ஷூட்டிங் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன. ஆனால் இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நானி, ரிதுவர்மா ஆகியோர் நடிக்கும் டக் ஜெகதீஷ் என்ற படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது.

இந்த படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து அந்த ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டது.

நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. அவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Exit mobile version