நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை ஒட்டி ‘மாஸ்டர்’ படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இருந்தார்கள்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, விஜய் சேதுபதி என பலரும் நடித்திருக்கும் படம் ‘மாஸ்டர்’.
படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியிட்டு இருந்தார்கள். இதில் ஆண்ட்ரியா இல்லை, படத்திலும் அவருடைய ரோல் என்ன என்பது சஸ்பென்ஸாகவே இருந்தது. நேற்று ஆண்ட்ரியாவின் பிறந்தநாளை ஒட்டி ‘மாஸ்டர்’ படக்குழு ஒரு ஸ்பெஷல் போஸ்டரை வெளியிட்டு இருந்தது.
READ MORE- ”சிம்பு படத்தின் அசிஸ்டெண்ட் டைரக்டர் நான்”- சிவகார்த்திகேயன் அதிரடி!
அதில், காலேஜ் ஐடி கார்டுடன் விஜய் அமர்ந்திருக்க அவரை பார்த்து சிரித்தபடி அருகில் அமர்ந்திருக்கிறார் ஆண்ட்ரியா. காலேஜ் ஃபங்ஷன்னில் இருவரும் அமர்ந்திருக்க ஆண்ட்ரியாவின் கழுத்தில் ஐடி இல்லை. எனவே, இவர் கல்லூரி நிர்வாகியா அல்லது என்ன கதாப்பாத்திரம் என ரசிகர்களிடயே விவாதம் எழுந்துள்ளது.
இன்னொரு பக்கம், இயக்குநர் மிஷ்கினின் ‘பிசாசு’ படத்தில் வில்லியாக நடிக்கிறார் ஆண்ட்ரியா. இதற்கான அறிவிப்பை அவரது பிறந்தநாளில் நேற்று ஸ்பெஷல் போஸ்டராக அவரது கதாப்பாத்திரத்தை வெளிப்படுத்தியிருந்தது படக்குழு.
மேலும் மிஷ்கினின் அசிஸ்டெண்ட் டைடர்க்டர்களும் ஆண்ட்ரியாவுக்கு கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடி இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.