தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து அவருக்கு சமூகவலைதளங்களில் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
கடந்த 2020-ம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் கவுதம் கிச்சுலு என்பவரை காஜல் அகர்வால் திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து சில மாதங்களில் அவர் தாய்மை பேறு அடைந்தார். அதனால் படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார்.
மேலும் இதுகுறித்து தகவலை சமூகவலைதளங்களில் உறுதி செய்யாமல் இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கவுதம் கிச்சுலு தன்னுடைய மனைவி காஜல் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தார். அதை தொடர்ந்து காஜல் அகர்வால் கர்ப்பமான வயிறுடன் போட்டோஷூட்டுகளை நடத்தினார்.
இந்நிலையில் காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அவருடைய தங்கையும் நடிகையுமான நிஷா அகர்வால் தனது இன்ஸ்டாவில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். இதையடுத்து சமூகவலைதளங்களில் ரசிகர்கள் பலரும் காஜல் அகர்வால் மற்றும் கவுதம் கிச்சுலுவுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.