திறமை இல்லாம தோத்தவங்க இப்படிதா பேசுவாங்க..மீரா மிதுனை அட்டாக் செய்த கஸ்தூரி

தமிழ் திரை உலகில் திறமை இருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என, நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் வாரிசுகளின் ஆதிக்கம் உள்ளதாக சமீப காலமாக ட்விட்டரில் மீரா மிதுன் தொடர்ந்து சர்ச்சைகுரிய கருத்துக்களை தெரிவித்து வருகிறார். குறிப்பாக தமிழ் திரையுலகில் முக்கிய நட்சத்திரங்களாக உள்ள விஜய் மற்றும் சூர்யாவை தனிப்பட்ட முறையிலும் அவர்களது குடும்பத்தினர் தொடர்பாகவும் அவர் பேசிய கருத்து பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தொடர்ந்து, விஜய் மற்றும் சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் மீரா மிதுனை கடுமையாக பேசியும், அவருக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டரை ட்ரெண்ட் செய்தும் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர். இதனிடையே, நடிகை ஷனம் செட்டியும் தனது பங்கிற்கு மீரா மிதுனை விமர்சித்து இருந்தார்.

இதுதொடர்பாக மீரா மிதுன் வெளியிட்டுள்ள வீடியோவில், சில பேர் நெபோடிசம் ப்ராடக்ட்களை சப்போர்ட் பண்ணி வீடியோக்கள் வெளியிடுகிறார்கள். இன்று என்னை பேட்டி எடுக்க வேண்டிய தயாரிப்பாளரே ஓடிப்போய்விட்டார். அதில் இருந்தே தமிழ் திரையுல மாஃபியா எவ்வளவு துரிதமாக வேலை செய்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம். நான் சொன்னது நூறு சதவீதம் உண்மையாகிவிட்டது.

இந்த நெபோடிசம் ப்ராடக்டுகளை சப்போர்ட் பண்ணி பேசுகிறவர்கள் எங்கேயாச்சும் ஓரமா ஒரு ஐட்டம் டான்ஸ் கிடைக்கும் என்பதற்காக பேசிக் கொண்டிருக்கிறார்கள். என்னை இன்னுமே திட்டி, கெட்ட வார்த்தைகளை யூஸ் பண்ணி ரொம்ப மோசமாக வீடியோக்கள் வெளியிட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

முடிந்தால், விஜய்யின் ஒரு ஆடிஷன் வீடியோவை வெளியிடச் சொல்லுங்கள். அதன் பிறகு அவர் நெபோடிசம் ப்ராடக்ட் இல்லை என்று நான் ஒப்புக் கொள்கிறேன்.

சூர்யா, இயக்குனர் மணிரத்னம் படத்தில் எல்லாம் நடித்திருக்கிறார் என பல பேர் கூறுகின்றனர், மணிரத்னம் என்று நெபோடிசம் ப்ராடக்ட் இல்லாதவர்களுடன் படம் பண்ணி இருக்கிறார். மாதவன், அரவிந்சாமியை தவிர அவர் யூஸ் பண்ணியது எல்லாமே நெபோடிசம் ப்ராடக்ட்ஸ் தானே என குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், நெபோடிசம் அல்லது கேம்ப்புகள் அல்லது மாஃபியா ஒர்க்அவுட் ஆகாத ஒரு அருமையான இடம் தான் தமிழ் திரையுலகம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ் திரையுலகில் வெற்றி பெற 2 விஷயம் மட்டுமே உதவும். ஒன்று அதீத திறமை, மற்றொன்று அதிர்ஷ்டம். இது சினிமா குடும்பம் அல்லது மாஃபியா அல்லது யாராக இருந்தாலும் பொருந்தும். அதனால் தான் விஜய், சூர்யா, கார்த்தி, ஜெயம் ரவி போன்ற கடின உழைப்பாளி, திறமைசாலிகள் வெற்றி பெற்றுள்ளனர். அஜித், விஜய் சேதுபதி போன்ற திரையுலக பின்னனி இல்லாதவர்களும் வெற்றி பெற்றுள்ளனர் திறமை இல்லாத, லூசர்கள் தான் ஏதாவது குறை சொல்லி, கோலிவுட்டில் நெபோடிசம் இருக்கிறது என்பார்கள். இதுல நிறைய பேசணும். விரைவில் வீடியோ வெளியிடுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Exit mobile version