டோலிவுட் பிரின்ஸுக்கு ஜோடியாகும் கீர்த்தி சுரேஷ்…

தெலுங்கு திரையுலகில் டோலிவுட்டின் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிப் படங்களில் நடித்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். தமிழில் இது என்ன மாயம் படத்தில் அவர் அறிமுகமானார். இவர் 2018-ல் நடித்த சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்றுப் படமான நடிகையர் திலகம் படம் சூப்பர் ஹிட்டானது. இந்தப் படத்தில் சிறப்பாக நடித்ததற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசியவிருது கிடைத்தது.

தமிழில் இந்தப் படம் நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளிவந்து சூப்பர் ஹிட்டடித்தது.
இந்நிலையில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் கீர்த்தி சுரேஷ். இதில் ஹீரோ டோலிவுட் பிரின்ஸ் என்று அழைக்கப்படும் மகேஷ்பாபு. இந்தப் படத்தை பரசுராம் பெட்லா இயக்குகிறார். இவர், விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனா நடித்த கீதா கோவிந்தம் என்ற சூப்பர் ஹிட் படத்தை இயக்கியவர்.மகேஷ் பாபு நடிக்கும் படத்துக்கு, சர்காரு வாரி பாட்டா என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா தீவிரம் குறைந்த பிறகு ஷூட்டிங் தொடங்கப்பட உள்ளது.

Exit mobile version