தென்னிந்திய ரசிகர்களுக்கு நாங்கள் கடவுளா ? ஆச்சர்யத்தில் நடிகை பூஜா ஹெக்டே..

தமிழ்,தெலுங்கு ரசிகர்கள் நடிகர்,நடிகைகளை கடவுள் போன்று பார்ப்பது எங்களுக்கு ஆச்சர்யமா இருக்கிறது என்று நடிகை பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் ஜீவா நடித்த முகமூடி படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி படங்களில் முன்னணி கதாநாயகியாக வளம் வருகிறார்.சமீபத்தில் அல்லு அர்ஜுனா நடித்த அல வைகுந்தப்ரோமலு படத்தில் வெளிவந்த புட்ட பொம்மா பாடல் மூலம் தெலுங்கு மட்டும் அல்லாது இந்திய இளைஞர்களை தன் பக்கம் சொக்க வைத்தார்.பூஜா ஹெக்டே தற்போது அளித்த பேட்டியில்,“தென்னிந்தியா ரசிகர்கள் திரைப்படத்திற்கு அமோக ஆதரவு தொடர்ந்து கொடுத்து வருகின்றனர். இதை வேறு எங்கும் காண முடியாது. தமிழ், தெலுங்கில் நடிகர், நடிகைகளை ரசிகர்கள் கடவுள் போல் ஆராதிக்கிறார்கள்.

சம்பளம் அதிகம் கொடுத்து,படப்பிடிப்பையும் திட்டமிட்டு விரைவாக முடித்து விடுகின்றனர். இந்தியில் ஒரு படத்தில் நடிக்கும் கால நேரத்தில் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் 2 படங்களில் நடித்தே ,முடித்து விடலாம்.ஒரு படம் வெளியாகி ரசிகர்களின் பங்களிப்பால் அந்த திரைப்படம் 200 கோடியும் வசூல் செய்து சாதனை படைக்கிறது.இதற்கு முழுக்க முழுக்க மக்களின் ஆதரவே காரணம்.

ஒவ்வொரு படத்தையும் ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி வருகிறார்கள்.அவர்களுக்கு பிடித்த நடிகர், நடிகைகள் படங்கள் வெளியாகும் போது தியேட்டர்களில் ரசிகர்கள் செய்யும் கோலாகலம் அதிரடி தான்.இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இந்த காலத்தில் கடவுள்களுக்கு பிறகு நடிகைகளுக்கு கோவில் கட்டிய அதிசயம் இங்குதான் நிகழ்ந்தது. இவ்வாறு பூஜா ஹெக்டே கூறினார்.

Exit mobile version