தான் மீண்டும் காதலிப்பதாக ஷ்ருதிஹாசன் மனம் திறந்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் காதலில் இருப்பதாக ஷ்ருதிஹாசன் தெரிவித்து இருந்தார். ஆனால், சில காரணங்களால் காதல் கைகூடாமல் போக பிரிய நேரிட்டது.
அதன் பிறகு தனது படங்களிலும், இசையிலும் ஷ்ருதி கவனம் செலுத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷ்ருதிஹாசன் தனது ரசிகர்களுடன் கேள்வி பதில் பகுதியில் கலந்துரையாடினார்.
READ MORE- மீண்டும் சர்ச்சையில் சிக்கிய விஷ்ணுவிஷால்!
இதில் ‘நீங்கள் மறுபடியும் காதலிக்கிறீர்களா?’ என ஒருவர் கேட்க அதற்கு ‘ஆமாம்’ என பதிலளித்துள்ளார். மேலும், ’இந்த வருடம் திருமணம் செய்து கொள்வீர்களா?’ என கேட்கப்பட்ட கேள்விக்கு ‘இல்லை’ எனவும், ‘உங்கள் எக்ஸ்ஸை வெறுக்கிறீர்களா?’ என்ற கேள்விக்கு ‘நான் யாரையும் வெறுப்பதில்லை’ எனவும் பதிலளித்துள்ளார் ஷ்ருதி.