சின்னத்திரை நடிகை தற்கொலை… தற்கொலை கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அந்த விஷயம்!!

கன்னட சீரியல் நடிகை செளஜன்யா தற்கொலை செய்துக் கொண்டது திரையுலகினருக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் பெங்களூருவில் உள்ள கும்பல்கோட்டில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தனிப்பட்ட வாழ்க்கையில் செளஜன்யா ஏதேனும் துன்பங்களை அனுபவித்தாரா என கண்டுபிடிக்க காவல்துறை முயற்சிப்பதாகவும், நடிகையின் தற்கொலை குறித்து குடும்பத்தினரிடமும், சக ஊழியர்களிடமும் விசாரித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதோடு போலீசார் அவர் தற்கொலைக்கு முன்னர் எழுதிய கடிதத்தையும் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில் இந்த முடிவுக்கு வேறு யாரையும் குற்றம் சாட்டவில்லை என்றும், அவரது தற்கொலைக்கு அவர் மட்டுமே பொறுப்பு என்றும் அந்த குறிப்பில் கூறப்பட்டுள்ளது. செளஜன்யா தனது பெற்றோரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். தனக்கு எந்த உடல்நலப் பிரச்சினையும் இல்லை என்றாலும், தான் வாழ்க்கையில் எதிர்கொண்டவற்றால் மனதளவில் பாதிக்கப்பட்டதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு தனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செளஜன்யா ஒரு சில தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார் மற்றும் ஓரிரு படங்களில் நடித்துள்ளார். இந்த அவரது ரசிகர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version