திரைப்பட நடிகை பூர்ணாவை மிரட்டி பணம் பறிக்க முயன்ற வழக்கில், கோவையை சேர்ந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கேரள மாநிலம் கொச்சியில் குடும்பத்துடன் வசித்து வரும் திரைப்பட நடிகை பூர்ணாவிடம், நகைக்கடை அதிபர் எனக் கூறி, கும்பல் ஒன்று பணம் பறிக்க முயன்றது. இதுகுறித்த வழக்கில் இதுவரை, 10க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், மாடல் அழகிகள் உட்பட மேலும் பல பெண்களிடமும் சினிமா வாய்ப்பு தருவதாகக் கூறி பணம், நகை பறித்தது தெரிந்தது. பாலக்காட்டிலுள்ள ஓட்டல் அறையில் மாடல் அழகிகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தியதும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இவ்வழக்கில் தொடர்புடைய கோவையைச் சேர்ந்த நஜீப் ராஜா, 27, ஜாபர் சாதிக், 27, ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார், எர்ணாகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.