தான் மீண்டும் காதலில் இருப்பதாக வனிதா விஜயகுமார் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிக்பாஸ் புகழ் வனிதா பீட்டர்பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இது வனிதாவின் மூன்றாவது திருமணம் என்பதாலும், பீட்டர்பால் இன்னும் முறைப்படி முதல் திருமணத்தில் விவாகரத்து பெறாதவர் என்பதாலும் இது சர்ச்சையாகியது.
பீட்டர்பாலின் முதல் மனைவி எலிசபெத் இவர்கள் திருமணம் குறித்து பிரச்சனை செய்தார். பீட்டர்பால் ஒரு குடிநோயாளி எனவும் பிள்ளைகளை பார்த்து கொள்ள வேண்டும் எனவும் தொடர் கோரிக்கை வைத்து கொண்டிருந்தார்.
READ MORE- ’அந்தாதூன்’ ரீமேக்கில் இணைந்த முன்னனி பிரபலங்கள்!
பீட்டர்பால் குடிநோயாளி என்பதை ஆரம்பத்தில் வனிதா மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பிறகு இதை ஒத்து கொண்ட வனிதா, பீட்டர்பாலை சமாளிக்க முடியவில்லை எனவும் அவருடன் வாழ்க்கையை முடித்து கொள்வதாகவும் அதிரடியாக அறிவித்தார்.
இதன் பிறகு தற்போது மீண்டும் காதலில் இருக்கிறேன் என தனது இன்ஸ்டா பக்கத்தில் அறிவித்துள்ளார் வனிதா. இது அவரது ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.