இதுதான் அஜித் கையெழுத்தா..? வைரலாகும் கடிதம்..!!

ajith kumar
ajith signature

கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை அளித்த நடிகர் அஜித் குமார் கைப்பட எழுதி நன்றி தெரிவித்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான ‘வலிமை’ திரைப்படம் பெரியளவில் வெற்றி அடையவில்லை. எனினும், இந்த கூட்டணி அந்த படத்திலும் ஒன்று சேர்ந்து பணியாற்றுகின்றனர். அதை தொடர்ந்து லைக்கா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிக்கிறார் அஜித்.

பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு படங்களையும் ஒரே நேரத்தில் அவர் கமிட் செய்துள்ளது இதுவே முதல்முறை. நீண்ட நாட்கள் பணியாற்ற வேண்டிய சூழல் உள்ளதால், கேரளாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார் அஜித். அங்கு அவர் பல்வேறு இடங்களுக்கு சென்று வரும் புகைப்படங்கள் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

மேலும் அஜித் அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது அவருக்கு ஆயுர்வேத சிகிச்சை அளித்த மருத்துவரகள், பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Exit mobile version